உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை
- மோசடி தொடர்பாக 22க்கும் மேற்பட்ட வழக்கு
- 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த நெல்லைமகன் பன்னீர் செல்வம்(வயது 60).இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ள நிலையில் இன்று ஆண்டிக்குளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சென்னை வீட்டிலும் சோதனை நடைபெற்றது.சென்னை குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்ற னர். மோசடி வழக்கு தொடர்பாக இந்த, அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.