உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதி அருகே அரசு மதுபானக்கடைகளை அகற்றகோரி பெண்கள் சாலை மறியல்

Published On 2023-06-24 13:09 IST   |   Update On 2023-06-24 13:09:00 IST
  • பொன்னமராவதி அருகே அரசு மதுபானக்கடைகளை அகற்றகோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • ஒரே ஊராட்சியில் 2 இடங்களில் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மணப்பட்டி கிராமத்திற்கு மேற்கு பகுதியான உலகம்பட்டி சாலை மற்றும் கிழக்குப்பகுதியான புதுக்கோட்டை சாலை செம்பொட்டல் என ஒரே ஊராட்சியில் 2 இடங்களில் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகள் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதாகவும், மது அருந்துபவர்களால் மதுபாட்டில்கள் உடைத்து விவசாய நிலங்களில் போடப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே உடனடியாக 2 அரசு மதுபானக்கடைகளையும் மூடவேண்டும் என வலியுருத்தி பெண்கள் பொன்னமராவதி-புழுதிபட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News