உள்ளூர் செய்திகள்

பேனர்களை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

Published On 2022-06-20 14:00 IST   |   Update On 2022-06-20 14:00:00 IST
  • பேனர்களை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்தனர்

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மேலப்பட்டி ராசியமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் சித்தி விநாயகர் முருகன் கோவில்கள் உள்ளது. இங்கு புதிய கோவில் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த கட்சியினர், பொதுமக்கள் என ஆலங்குடி- கறம்பக்குடி சாலை எம்.ராசியமங்கலம் நெடுகிலும் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்துவிட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் பேனர்களை கிழித்தெறிந்த மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்த ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆ ய்வாளர் அழகம்மை சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் மற்றும் போ லீசார் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேனரை கிழித்த மர்ம நபர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என உறுதியளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் புகார் மனு எழுதி கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News