உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-10 10:57 IST   |   Update On 2023-03-10 10:57:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
  • வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு சங்க தலைவரும் ஆலங்குடி வருவாய்த்துறை அலுவலரும் துறைகண்ணு தலைமையில் 4.45. முதல் 5.45-வரை வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே அறிவித்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு, பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அரசாணையை வெளியிட வேண்டும். மற்றும் அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத:து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

Similar News