உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-09-21 11:32 IST   |   Update On 2022-09-21 11:32:00 IST
  • சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • 20 கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும்

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், வீரமங்களம், பொன்னாலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முக்கிய கடைவீதிகளுக்கு சென்று வர ஊராட்சி சார்பில் போடப்பட்டிருந்த ஆவுடையார்கோவில்-புதுவயல் தார்ச்சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளே ஆனாலும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவி வருவதாகவும், அவசர மருத்துவ காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்று வரக்கூட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதோடு மட்டுமல்லாது இவ்வழியாக வந்த அரசு பேருந்துகள் இவ்வழியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் நாங்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றோம் என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் இதனை வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு 20 கிராம மக்கள் போக்குவரத்திற்காக உள்ள சாலையை விரிவுபடுத்தி செப்பனிட்டுத்தர கேட்டுக் கொண்டனர்.


Tags:    

Similar News