கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம்
- கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது
- ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினரை சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான பட்டையன் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல்வேறு தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்து மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டு மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர பெண்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர், ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினார். அப்போது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அளவிட்டு நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.