உள்ளூர் செய்திகள்
பேரூராண்டார் கோவில் கும்பாபிஷேக விழா-அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
- பேரூராண்டார் கோவில் கும்பாபிஷேக விழா பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
- ளத்தை தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார்க்கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோ வில் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தை சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் கட்டியதாக வரலாறு, இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார் பின்னர் அவர் குளத்தை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், நகர செயலாளர் பழனிகுமார், செயல் அலுவலர் பால சுப்பிரமணியன், கோவில் நிர்வாகி பைரவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.