உள்ளூர் செய்திகள்

எண்ணெய் கடையில் தீ விபத்து

Published On 2022-12-15 14:47 IST   |   Update On 2022-12-15 14:47:00 IST
  • எண்ணெய் கடையில் தீ விபத்து ஏற்பட்டது
  • பொருட்கள் எரிந்து சேதம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டவுனில் உள்ள காமராஜர் தெருவில் அப்துல் ரஜாக் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அருகில் உள்ள கடைகளில் தீப்பற்றுவதற்குள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தீ பற்றியதால் கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தப்பினர். எண்ணெய் கடையில் உள்ள எண்ணை டின்கள் மற்றும் அதற்குண்டான உபகரணங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News