அறந்தாங்கியில் பல்நோக்கு மருத்துவ முகாம்
- அறந்தாங்கியில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
அறந்தாங்கி,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் மருத்துவம், கர்பிணிப்பெண்களுக்கான மருத்துவம், எழும்பியல், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், செவித்திறன் கருவி, தொழுநோய்க்கான காலனிகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,மருத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.