உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா

Published On 2023-02-22 16:03 IST   |   Update On 2023-02-22 16:03:00 IST
  • ஆலங்குடி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா நடைபெற்றது
  • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள மேற்பனை க்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீரமாகாளி யம்மன் கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தினந்தோ றும் வாணவேடிக்கை, மங்கள இசையுடன் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக முளைப்பாரி எனும் பாலிகை எடுப்புத்திருவிழா நடந்தது. முளைப்பாரி திருவிழாவில் மேற்பனைக்காடு மேலக்காடு, வடையக்காடு, குறிஞ்சி நகர், கன்ரான் குடியிருப்பு, கீழக்காடு, தெக்கிக்காடு, ராஜாளி குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் தானியங்களை முளைவித்த பாத்திரங்களை மலர்களால் அலங்கரித்து, கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தலையில் சுமந்து வந்து மண்ணடித்தி டலைச்சுற்றி வந்தனர். பின்னர்ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பெரிய குளத்தில் முளை ப்பாரிகளை கரைத்து அதன் பின்னர் கூட்டு பிரார்த்தனை நடத்தி அம்மனை வழிபட்டனர். இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் மது எடுப்பு திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News