உள்ளூர் செய்திகள்
- சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது
- கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தீர்மானம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம், தலைவர் ரேணுகாதேவி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர் பழனிவேல், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், வருகின்ற கல்வி ஆண்டில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும், பள்ளியில் குடிநீர் வசதிக்காக புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை சரியாக பயன்படுத்தவும், ஆர்.ஓ. சிஸ்டம் ஸ்பான்சர் மூலம் அமைக்கவும், சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.