கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம்
- 24 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவு கோரி கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
- 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதி பெற்ற ஒரு நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததாலும், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்ப டுவதி ல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.மேலும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர சிகிச்சை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிப்பு க்கு உள்ளாகி வரும் சூழல் உருவாகியுள்ளதால் இந்த மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டுமானால் அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்களும் வர்த்தகங்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் இன்று பொதுமக்கள், வர்த்தகர்கள், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட கறம்பக்குடி அரசு மருத்துவமனை மீட்புக் குழுவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில்:புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாள் ஒன்றுக்கு 500 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய நிலையில், 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக தொடங்க வேண்டுமென்றும், அதேபோல் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் பலகட்ட போராட்டத்தை நடத்தியும் அதிகாரிகளும் அரசும் அலட்சியமாக இருப்பதாகவும் இனியும் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.