இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா
- ஆலவயலில் , பொன்னமராவதி இயற்கை வேளாண்மை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன உரம், பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலைய திறப்பு விழா நடை பெற்றது.
- இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரெங்கபாஜுயம்,கூட்டுறவு வங்கிச்செயலர் பழனிச்சாமி, துணை த்தலைவர் சுப்புலெட்சுமி பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை :
பொன்னமராவதி இயற்கை வேளாண்மை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன உரம், பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலைய தொடக்க விழா ஆலவயலில் நடந்தது.
விழாவிற்கு வட்டார த்தலைவர் கணேசன் தலைமைவகித்தார். மிராஸ்அழகப்பன்அம்பலம் முன்னிலைவகித்தார். ஊராட்சித்தலைவர் சந்திரா சக்திவேல் வேளாண்மை அலுவலர் ராதாகிருஸ்ணன், முதன்மைச்செயல் அலுவலர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விற்பனையகத்தை தொடங்கிவைத்தனர்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரெங்கபாஜுயம்,கூட்டுறவு வங்கிச்செயலர் பழனிச்சாமி, துணை த்தலைவர் சுப்புலெட்சுமி பழனிச்சாமி, உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சண்முகவேல், பொருளாளர் சிவசாமி,
இயக்குனர்கள் மோகன், கணபதி, ராமலிங்கம், மணி, மலைச்சாமி, வெள்ளைச்சாமி,ஊராட்சி அளவிலான நிர்வாகிகள் முருகேசன், வருங்காலம்அடைக்கன், வடமலை,ஆண்டியப்பன்,அழகப்பன்,செல்லையா உட்பட பலர்கலந்து கொண்டனர்.