மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கு தலை குனிவு- கே.பாலகிருஷ்ணன் பேட்டி
- புதுக்கோட்டை அருகே குடி நீர் தொட்டியில்
- மனித கழிவு கலக்கப்பட்ட சம்வம் தமிழகத்திற்கு தலை குனிவு என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கை வயல் ேமல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது,மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே வெட்கி தலை குனிய வைத்துள்ளது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.தமிழ விவசாயிகள், அரசியல் கட்சிகளில் போராட்டத்தைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்குவது வரவேற்க தக்கது. ஆசிரியர்கள் போராட்டங்கள் என்பது தற்போதைய ஆட்சியே காரணம் என்று கூறமுடியாது. அது கடந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளும் இதில் அடங்கி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரரைப்போல செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டுமென சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது நியாயமான கோரிக்கைதான் என்றார்.