உள்ளூர் செய்திகள்

தனியாருக்கு நிகராக அரசு பள்ளி திகழ்கிறது-அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்

Published On 2023-06-28 12:50 IST   |   Update On 2023-06-28 12:50:00 IST
  • தனியாருக்கு நிகராக அரசு பள்ளி திகழ்கிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம் கொண்டார்
  • சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமை சட்டதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடை உணவு வகைகளை பார்வையிட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களோடு தீவணப் பயிர்களை கால்நடை வளர்ப்போரிடம் வழங்கினார்.இதனை தொடர்ந்து அமைச்சர் தெரிவித்ததாவது, இன்று தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் விலை கொடுத்து வாங்கக்கூடிய புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை இன்று அரசு அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது.

எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் அரசு, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொது மேலாளர் தங்கமணி, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் புவராஜன், உதவி இயக்குநர் பாபு, ஊராட்சிமன்றத் தலைவர்கள் சோலையம்மாள் சிவக்குமார், முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவரஞ்சனி வினோத்குமார் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News