குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
- குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விணாகிறது.
- போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரகிரா–மங்களுக்கு திருச்சிகொள்ளி–டத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வருகிறது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு
குடிநீர் வீணாக சாலைகளிலும் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் செல்வதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.மேலும், பொது மக்களுக்கும் குடிநீர் பிரச்சனை ஏற்ப–டுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும்,கந்தர்வ–கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிக–ளிடம் ஒன்றிய கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறு–த்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க–வில்லை என கூறப்ப–டுகிறது.
எனவே குடிநீர்தேவை––யின் அவசியத்தை கருதி–காவிரி குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.