உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-20 12:09 IST   |   Update On 2022-10-20 12:09:00 IST
  • உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொது செயலாளர் முகமது அலிஜின்னா முன்னிலை வகித்து கண்டனவுரையாற்றினார். அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்பணியா ளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்க வேண்டும்,

வேலையில் சேர்ந்து 3 ஆண்டுகள் முடிந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத்துணை தலைவர் சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News