உள்ளூர் செய்திகள்
அரவம்பட்டி கிராம மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு கோரிக்கை
மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி கூறியுள்ளார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி கிராமத்தில் அம்பலக்காரதெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு இதுவரை மனை பட்டா வழங்காமல் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு அரசு இலவச மனை பட்டா கேட்டு ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண்பிரசாத் ஆகியோர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி கூறியுள்ளார்.