உள்ளூர் செய்திகள்

வாழைக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-09-20 11:40 IST   |   Update On 2022-09-20 11:40:00 IST
  • வாழைக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • கனமழையால் 100 ஏக்கரில் பயிரிட்ட வாழை நாசம்

 புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை நான்கு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு மழை சந்தோசத்தை ஏற்படுத்தினாலும் வாழையை முற்றிலும் அடித்து விட்டதாக புலம்புகின்றனர். ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான வம்பன், மைக்கேல்பட்டி, வேங்கிடகுளம், தெட்சிணாபுரம், கொத்தகோட்டை, வெண்ணவால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழை குலையுடன் கீழே சாய்ந்து நாசமாகின.இதனை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

ஆண்டு கணக்கில் உழைத்த உழைப்பிற்கு வருமானம் கிடைக்கும் நேரத்தில் இந்த இயற்கை இடர் காரணமாக மொத்த உழைப்பும் வீணாகி விட்டதாகவும், ஒவ்வொரு முறையும் தாங்கள் பா திக்கப்படும் பொழுது நிவாரணம் தருவதாக சொல்லும் அதிகாரிகள் அதன் பிறகு நிவாரணத்தை தருவதே இல்லை எனவும் விவசாயிக ள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக பயிரி டப்பட்டிருந்த மற்ற பல வகை மரங்களும் வேரோடு சாய்ந்தது.

அத்தோடு தங்களது இழப்பிற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக் கை எடுத்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என விவசா யிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News