ஆலங்குடியில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசு-தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- டீசல் விலையை கட்டுப்படுத்திட கோரியும் கோஷம்
ஆலங்குடி,
ஆலங்குடியில் மத்திய பட்ஜெட் மற்றும் தமிழக ஆளுநர் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடகாடு முக்கத்தில் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைத்திட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு நிதியை குறைக்க கூடாது, பெட்ேரால் டீசல் விலையை குறைத்திட வேண்டும். விலை வாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும், தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில்சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர், சி.பி.எம். மாநகரச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பாண்டிசெல்வி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.