முதலமைச்சரின் காலை உணவுகளின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
- முதலமைச்சரின் காலை உணவுகளின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ-நத்தம் பண்ணை ஊராட்சி, விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தயார்செய்யப்பட்டுள்ள காலை உணவுகளின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர்ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உயர்தரத்துடன் தயார்செய்வதற்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர்மாவட்ட கலெக்டர்தெரிவித்ததாவது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,048 துவக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகள் காலை உணவுகளை சத்தான முறையில் உண்பதன் மூலம் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல முறையில் கல்வி கற்கவும் முடிகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) எம்.ஜெயராமன், ஊராட்சிமன்றத் தலைவர்ஏ.வி.எம்.பாபு, வட்டாட்சியர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர்நந்தகுமார், சமுதாய கள பயிற்றுநர்காளீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்