கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பேரணி
- கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேரணியும், சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியும் நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன் அனைவரையும் வரவேற்றார்.
சிவன் கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவா, சிவனடியார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒருங்கிணைத்து கல்வெட்டு வாசிப்பு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், ஆசிரியர்கள் சித்ரா தேவி, பாத்திமா, ஐயப்பன், செல்வமணி, சரவணன், தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.