உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் போராட்டத்தால் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை பூட்டிய அதிகாரிகள்

Published On 2022-08-14 07:15 GMT   |   Update On 2022-08-14 08:19 GMT
  • மாணவர்கள் போராட்டத்தால் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டினார்
  • சாலை மறியலில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள இச்சடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கும்முப்பட்டி, இச்சடி, முள்ளுர், முக்காணிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இச்சடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் துணை வட்டாட்சியர் கவியரசு, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, ஆலங் குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் செம்பட்டிவிடுதி போலீசா ர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் அந்த கடையை மூடுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள முன்னிலையில் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News