பொன்னமராவதி பகுதியில் வேறொரு ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து விவசாயி வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு
- வேறொரு ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து விவசாயி வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு போனது
- உதவுவது போல் நடித்து மர்ம நபர் கைவரிசை
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 64). விவசாயியான இவர் தனது வங்கி ஏ.டி.எம். கார்டுடன் கடந்த 15-ந்தேதி பொன்.புதுப்பட்டி இந்தியன் வங்கிக்கு சென்றார்.பின்னர் அங்குள்ள மையத்தில் தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. அத–னால் புதுவளவு ரோட்டில் உள்ள மற்றொரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று எடுக்க தெரியாமல் தவித்தார்.
அப்போது அருகில் இருந்த அடையாளம் தெரி–யாத நபர் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறியுள் ளார். அவரை நம்பி ஏ.டி.எம். கார்டை மாணிக்கம் கொடுத்துள்ளார். அந்த நபரும் பணம் வரவில்லை என்று மாணிக்கத்தை ஏமாற்றும் நோக்கில் வேறோரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.இதையடுத்து ஒரு மணி நேரத்தில் மாணிக்கத் தின் செல்போன் எண் ணுக்கு அடுத்தடுத்து குறுஞ் செய்திகள் வந்துள்ளது. அதில் புதுக்கோட்டை-மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.50ஆயிரமும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.30 ஆயிரமும் எடுத்ததாக வந்துள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் மாணிக்கம் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். கார்டை ஏமாற்றி மாற்றி கொடுத்து ரூ.80 ஆயி–ரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு மர்மஆசாமி ஒருவன் பணம் எடுக்க வந்தவர்களிடம் உதவுவது போல் நடித்து வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்த சம்பவம் அரங்கேறியது.இதுபோன்று தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போன்று ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.