உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Published On 2022-09-22 14:22 IST   |   Update On 2022-09-22 14:22:00 IST
  • அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
  • ஆலங்குடி அ.தி.மு.க. சார்பில் நடந்தது

புதுக்கோட்டை:

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆலங்குடி செட்டிகுளம் பிள்ளையார் கோவில் திடலில் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு ஆலங்குடி மேற்கு ஒன்றிய கழகச்செயலாளரும் சிஎம்எஸ் தலைவர் மாஞ்சான்விடுதி ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், தலைமை கழகப் பேச்சாளர் நேமம் அன்பு முருகன் ஆகியோர் சிறப்புரை திருவாளர்களாக கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமை கழக பேச்சாளர்கள், தி.மு.க. செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டிvயும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்ர்கள்.

மாவட்ட பொருளாளர் வீசி ராமையா முன்னாள் எம்.எல்.ஏ. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.தனசேகரன் வழக்கறிஞர் பிரிவு ஆரலங்குளலிங்கம், நகர அவை தலைவர் முகமதுயூசுப் , மாவட்ட கட்டிட தொழிற்சங்க செயலாளர் அக.முத்து, இளைஞர் அணி பொருளாளர் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் ஏடி,மனமோகன், மாவட்ட எம் ஜிஆர் மன்ற தலைவர் சின்னு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் குணா (எ)குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண் முகநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முடிவில் ஆலங்குடி நகரச்செயலாளர் கேவிஎஸ்,பழனிவேலு நன்றி கூறினார்.

செட்டிகுளம் பிள்ளையார் கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம

Tags:    

Similar News