உள்ளூர் செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-22 14:17 IST   |   Update On 2022-09-22 14:17:00 IST
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தயார்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு கூடுதல் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாருதல், மழைநீர் வரத்து வாய்க்கால் தூர்வாருதல், பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் போன்றவை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாள ர் ஷம்பு கல்லோலிகர் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வேங்கிடகுளம் சீரமைப்பு பணிகளையும், ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவுசார் மையம் கட்டுமான பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள காட்டு புதுக்குளம் முதல் தேவன்குளம் வரையில் வரத்து வாய்கால் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

Tags:    

Similar News