உள்ளூர் செய்திகள்

கீரமங்கலத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க வேண்டும்

Published On 2022-08-07 12:37 IST   |   Update On 2022-08-07 12:37:00 IST
  • கீரமங்கலத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 15-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் விமல் துறை தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். முன்னதாக ஆலங்குடி பஸ் ஸ்டாண்டில் மாவட்டத் தலைவர் கர்ணா கொடியேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் குமாரவேல் அறிக்கையை தாக்கல் செய்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், ரவிக்குமார் தமிழரசன், செந்தமிழ், குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய புதிய நிர்வாகிகளான தலைவர் கனகராஜ், செயலாளர் சரவணன், பொருளாளர் பாண்டியன், கிழக்கு ஒன்றிய தலைவர் விமல்துரை, செயலாளர் பாலா, பொருளாளர் பிரபு, ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.

திருவரங்குளம் பகுதியில் உள்ள ஆரஸ்பதி மரங்களை அழிக்க வேண்டும். கீரமங்கலம் பகுதியில் விளையும் மலர்களைகொண்டு வாசனைதிரவிய தொழிற்சாலை துவங்கி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயலாளர் துறைநாராயணன் நிறைவுறையாற்றினார். நிகழ்ச்சியில் கனகராஜ், கார்த்திக், பிரபு, சின்னமணி, பாண்டியன், தினகரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் ஒன் றிய நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பேரூரா ட்சி கவுன்சிலர் பாலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News