உள்ளூர் செய்திகள்

ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

Published On 2023-06-10 06:30 GMT   |   Update On 2023-06-10 06:30 GMT
  • ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்
  • கணவர், மாமனார், மாமியார உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாஹர்பான் (வயது 27) இவருக்கும் புதுக்கோட்டை டைமண்ட்நகர் பகுதியைச் சேர்ந்த நிஷ்க்அஹமெட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிவுற்று 4 ஆண்டுகளில் குழந்தை ஏதும் இல்லாத சூழ்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்சுடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கணவர் நிஷ்க்அகமெட், மாமியார் அக்பியாபர்வீன், மாமனார் ரபியுதீன் ஆகியோர் சாஹர்பானுவிடம் ரூ. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான சாஹர்பான் அங்கிருந்து கிளம்பி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வழக்கு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, ஆய்வாளர் சாந்தகுமாரி தலைமையில் கணவர், மாமியார், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News