ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
- ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக
புதுக்கோட்டை:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா ரெட்டக்குறிச்சி ஊராட்சி வேப்பர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் வடிவேல் (வயது 40).
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பள்ளத்திவிடுதி ஊராட்சி கீழக்கரும்பி ரான்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனிவேலு (வயது 28 ).
இவர்களுக்குள் ஏற்பட்ட பழகத்தில் வடிவேல் தனக்கு வெளிநாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள், உடனடியாக வேலை வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு ரூ.6லட்சம் தரவேண்டும் என்று பழனிவேலுவிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய பழனிவேல், அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் 4 தவணைகளாக ரூ. 6 லட்சத்தை அனுப்பியதாக தெரியவருகிறது.
இந்நிலையில் நாட்கள் கடந்தும், வேலை கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனிவேல், ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வடிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் இது போன்று பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.