உள்ளூர் செய்திகள்

1040 அங்காடிகளில் 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு

Published On 2023-01-10 12:46 IST   |   Update On 2023-01-10 12:46:00 IST
  • வருகின்ற 13-ந் தேதி வரை வழங்கப்படும்
  • 1040 அங்காடிகளில் 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அர்பன் கடை எண் 17-ல், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தினை வழங்கி பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1037 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் மற்றும் இலங்கை தமிழர்மறுவாழ்வு முகாம்களில் உள்ள 3 அங்காடிகள் என மொத்தம் 1040 அங்காடிகளில் உள்ள 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 13-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் தினசரி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.இதனால் சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் குறைகள் ஏதேனும் இருப்பின் இலவச தொலைப்பேசி எண் மூலமாக புகார்தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், நகர்மன்ற தலைவர்திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, துணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார், கோபால், அப்துல்சலீம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News