உள்ளூர் செய்திகள்

காரில் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது

Published On 2023-01-21 11:41 IST   |   Update On 2023-01-21 11:41:00 IST
புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் சிக்கினர்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் ஆர்ச் பகுதியில் புதுக்கோட்டை டவுன் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு காரை மடக்கினர். அந்தக் காரில் டிரைவர் உட்பட 3 பேர் இருந்தனர்.பின்னர் அந்தக் காரில் போலீசார் சோதனை செய்த போது இருக்கைக்கு அடியில் 37.5 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கார் மற்றும் குட்கா ரூ.1000 ரொக்க பணம் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவோணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 37 ),புதுக்கோட்டை வெட்டன் விடுதி பாப்பான் விடுதி தமிழரசன் (38), புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கென்னடி (44) என்பது தெரியவந்தது. இவர்கள் தஞ்சாவூரில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை புதுக்கோட்டையில் விற்பனை செய்ய கடத்தி வந்தபோது போலீசில் சிக்கினர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 75 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்துள்ளார். 

Tags:    

Similar News