உள்ளூர் செய்திகள்
- மாணவி உட்பட 2 பேர் மாயமானார்
- 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மகோட் டையைச்சேர்ந்த செந்தில்குமார் மகள் பிரியதர்ஷினி (வயது 17) இவர் ஆலங்குடி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி காணவில்லை. உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்.
இதே போல் ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோ ட்டையைசேர்ந்த திருப்பதி மனைவி ரெத்தினம் (வயது 65) சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து வந்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மாயமான மூதாட்டி யை தேடி வருகின்றனர்.