உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே வாலிபர் உட்பட 2 பேர் மாயம்

Published On 2023-02-08 15:54 IST   |   Update On 2023-02-08 15:54:00 IST
  • ஆலங்குடி அருகே வாலிபர் உட்பட 2 பேர் மாயமானர்
  • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த சின்னத்துரை மகன் மணிகண்டன்(வயது 22).இவர் ஆலங்குடி எம்.ராசியமங்கலம் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணிகண்டன் கடந்த 3 நாட்களாக காணவில்லை. பின்னர் அவரது தந்தை சின்னத்துரை உற்றார் உறவினர்களிடம் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆலங்குடி காவல் நிலையத்தில் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

ஆலங்குடி அருகே உள்ள சேந்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் இளந்தென்றல் (35).இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இளந்தென்றலை காணவில்லை. இவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்து கிடைக்கவில்லை. இதையடுத்து வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்தில் இவரது மனைவி ரஞ்சிதா(25) கடந்த மாதம் 15 தேதி வீட்டில் இருந்த கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வல்லத்திராக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து இளந்தென்றலை தேடி வருகிறார்.

Tags:    

Similar News