உள்ளூர் செய்திகள்

திருமணஞ்சேரி ஊராட்சியில் ரூ.1.67 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-02-10 15:08 IST   |   Update On 2023-02-10 15:08:00 IST
  • திருமணஞ்சேரி ஊராட்சியில் ரூ.1.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • நிகழ்ச்சியில் 1023 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் ஸ்ரீ சுகந்த பரிமளழேஸ்வரர் ஆலயத்தின் அருகே அரசு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்குதல், பெண்களுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ரூபாய் 1.67 கோடி மதிப்பீட்டில் 1023 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் திருமணஞ்சேரி ஊராட்சி பட்டத்தி காடு, கருக்கா குறிச்சி, கருவடதெரு முள்ளங்குரறிச்சி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவை மற்றும் சாலை வசதிகளை உடனே செய்து தருவதாக எம்.எல்.ஏ. கூறினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். முகாமில் சிறப்பு பயிற்சி ஆட்சியர், துணை ஆட்சியர்கள் ஒன்றிய ஆணையர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி, ஸ்டாலின், சின்னையா ஒன்றிய குழு துணை தலைவர் பரிமளம், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான பரிமளம், வருவாய் ஆய்வாளர்கள் அன்னக்கொடி, ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News