உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் பழைய வேளாண்மை கட்டிடத்திற்கு தேங்காய் உடைத்த பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

திட்டக்குடியில் பழைய வேளாண்மை கட்டிடத்திற்கு தேங்காய் உடைத்து பொதுமக்கள் வழிபாடு

Published On 2023-10-06 13:29 IST   |   Update On 2023-10-06 13:29:00 IST
  • இதனை அடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
  • இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கொண்டு சட்ட விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை கூடம் கட்டிடம் கட்டி இயங்கி வந்தது. நாளடைவில் அந்தக் கட்டிடம் சேதமடைந்தும், இடியும் தருவாயில் இருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மணல்மேட்டில் இயங்கி வந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்பதால் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை கூடம் கட்டிடம் சேதமடை ந்தும், பாழடைந்தும், எந்த நேரத்திலும் விழும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமின்றி சமூக விரோதிகள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கொண்டு சட்ட விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பழைய வேளாண்மை கட்டிடத்திற்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிட த்தை ஆய்வு செய்து ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Tags:    

Similar News