உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Published On 2023-03-25 20:19 IST   |   Update On 2023-03-25 20:19:00 IST
  • வேளாண்துறை சார்பில் செடி, நாற்று, விதைகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
  • மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், சப்-கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி பங்கேற்றனர்

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இரு நபர்களுக்கு விபத்து இறப்பு நிவாரணமாக 2 லட்சம் ரூபாய், இயற்கை இறப்பு நிவாரணமாக 31 பேருக்கு, 7.10 லட்சம் ரூபாய், நலிந்தோர் உதவித்தொகை 5 பேருக்கு, 1 லட்சம் ரூபாய், முதியோர், விதவை உதவித்தொகை 12 பேருக்கு 1.44 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி துறை சார்பில் தையல் மிஷின், கூட்டுறவுத்துறை சார்பில் சிறுவணிக கடன், சுய உதவிக்குழு கடன், வேளாண்துறை சார்பில் செடி, நாற்று, விதைகள், நெல் நடவு இயந்திரம், உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், சப்-கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News