உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-01-30 06:56 GMT   |   Update On 2023-01-30 06:56 GMT
  • கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
  • அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தை அடுத்த செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் கொங்கு குலால பருத்திப்பள்ளிநாடு வசிஷ்ட ரிஷி கோத்ர குல பங்காளிகள் 65 குடிகளுக்கு சொந்தமான ஸ்ரீஅண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருதரப்பினர் இடையே திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தது.

இது குறித்து வழக்கு போட்டதால் தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்துள்ளது. இந்த நிலையில் 60 குடும்பங்களை தள்ளி வைத்து விட்டு 5 குடும்பங்களை சேர்ந்த வர்கள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்ச மாக அனுமதி அளித்திருப்ப தாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் 2-வது நாளாக நடந்தது. இந்த போராட்டம் குறித்து குலால சாலிவாகனமக்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

மல்லசமுத்திரம் அருகே உள்ள செண்பகமாதேவி அண்ணமார் கோவில் குலால குலத்தைச் சேர்ந்த ஒரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது. இதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்ததால் தற்போது தற்காலிகமாக கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. 65 குடும்பங்க ளில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒப்புதலை மட்டுமே பெற்று குறுகிய காலத்திற்குள் கும்பாபிஷேகத்தை ஏற்பாடு செய்து 60 குடும்பங்களை புறக்கணித்துவிட்டு கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அனைத்து மக்களையும் இணைத்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கு அறநிலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு சென்னையிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கொடுத்தோம்.

யாரும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கலெக்டர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கும்பாபிஷேகத்தை அனைவரையும் இணைத்து நடத்த வாய்மொழி உத்தரவு

கொடுத்தார். அதை அறநி லையத்துறை அதிகாரிகள் பின்பற்றாமல் செயல் அலுவலர் நந்தகுமார், உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் ஒரு தரப்பினருக்கு கும்பாபிஷேகம் நடத்து வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். அரசு இதை கவனத்தில் கொண்டு அனைத்து குடும்பங்களையும் இணைத்து கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும். அதுவரை தற்காலிகமாக விழா நடத்த தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News