விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
சிவகிரி அருகே சட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
- நீதிபதி கே.எல்.பிரியங்கா வழிகாட்டுதலின்படி சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிராமங்களில் வீடுவீடாகச் சென்று சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
சிவகிரி:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழு ஆணையின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி குமரகுரு அறிவுறுத்தலின்பேரில், சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி கே.எல்.பிரியங்கா வழிகாட்டுதலின்படி சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகிரி அருகே வேலாயுதபுரம், இராமநாதபுரம், அருளாட்சி என்ற திருமலாபுரம் ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், நீதிமன்றங்களில் வட்ட சட்ட பணிகள் குழு இயங்கி வருவதன் நோக்கங்கள் குறித்தும் வழக்கறிஞர் செந்தில்திருமலைக்குமார், சட்டம் சார்ந்த தன்னார்வலர் ராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.