உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்பறையை சட்டமன்றபேரவை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி. அருகில் மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் பலர் உள்ளனர்.

தருமபுரியில் சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு

Published On 2023-08-23 15:56 IST   |   Update On 2023-08-23 15:56:00 IST
  • பின்னர் அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆய்வகம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
  • இந்த ஆய்வின் போது, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தருமபுரி,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்போரூர் பாலாஜி, பரமத்திவேலூர் எஸ். சேகர் ஆகியோர் இன்று தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் சாந்தி உடன் சென்றார்.

இன்று காலை சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் காரி மங்கலத்திற்கு சென்றனர். அங்கு உள்ள அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் முதற்கட்டமாக செய்தபோது, அங்குள்ள ஒரு வகுப்பறையில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ., எப்படி விரிசல் விழும் அளவிற்கு தரமற்ற முறையில் கட்டிடம் கட்டினீர்கள் என அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். இதேபோன்று கல்லூரியில் உள்ள சமையலறைக்கு சென்று ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

பின்னர் அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆய்வகம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு காரிமங்கலம் பஸ் நிலையம், உழவர் சந்தை, வாரசந்தை, மின்தகன மேடை மற்றும் அரசு திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தருமபுரி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகம், அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News