உள்ளூர் செய்திகள்

வளையதர சுற்றுகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களை படத்தில் காணலாம்.

மின்சாரம் தடைபட்டால் மாற்று வழியில் உடனடியாக வழங்க ஏற்பாடு-நெல்லையில் பழுதான வளையதர சுற்றுகள் சீரமைப்பு

Published On 2022-11-23 09:50 GMT   |   Update On 2022-11-23 09:50 GMT
  • வளைய தரச் சுற்று மற்றும் பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகமான தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அலுவலகத்தில் நடந்தது.
  • பழுதானவற்றை சரி செய்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்களையும் எடுப்பதற்கு உத்தரவிட்டார்கள்.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள வளைய தரச் சுற்று மற்றும் பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகமான தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அலுவலகத்தில் நடந்தது.

மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புறக் கோட்டத்தில் மின் பகிர்ந்தளித்ததில் முக்கிய பங்கு வகிக்கும் பயன்பாட்டில் உள்ள 102 வளைய தர சுற்றுகள்,104 பிரிவுபடுத்தல் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் பழுதானவற்றை சரி செய்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்களையும் எடுப்பதற்கு உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் நேற்று டவுன் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட 3 வளையதர சுற்றுகளின் பழுதான கேபிள்களை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

இதன் மூலம் டவுன் பிரிவில் பொது மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்க ஏதுவாக அமையும். மின் பகிர்ந்தளிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வளையத்தரசுற்றை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வந்த, உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் பணியாளர்களை, மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நகர்புறக்கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News