உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கல்

Published On 2023-08-11 15:11 IST   |   Update On 2023-08-11 15:11:00 IST
  • பள்ளி குழந்தைகளுக்கு 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
  • பள்ளி குழந்தைகளுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளே உனக்காகதிட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார்.

ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி குழந்தை களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் 'போக்சோ சட்டத்தின் முக்கியத்து வத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

மேலும் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தை களுக்கு 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெகடர் ராதாகி ருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராதை, ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், ஆசிரியர்கள் நாகேந்திரன், சுமன், வேம்பரசி, சுபத்ரா, தாரணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார். முடிவில் ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News