உள்ளூர் செய்திகள்

முத்தரசன் பேட்டியளித்தார்.

தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும் - முத்தரசன் பேட்டி

Published On 2022-06-25 10:03 GMT   |   Update On 2022-06-25 10:03 GMT
  • மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
  • கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும்.

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு, பேரிடர் நிதி முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை. அப்படிபட்ட சூழலிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மேகதாது அணைகட்டுவோம் என்று கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்த்து அறிக்கை விடுவதோடு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்திருக்கிறது. அதற்கான இடுபொருட்கள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும். நெல்லுக்கான ஊக்கத்தொ கையை காலத்தில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராசு, மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News