உள்ளூர் செய்திகள்

திருவாடுதுறை ஆதீன நிலங்களுக்குரிய குத்தகைதாரர்களுக்கு உரிய குத்தகை அனுமதி வழங்க வலியுறுத்தி போராட்டம்-விவசாயிகள், பொதுமக்கள் அறிவிப்பு

Published On 2023-04-10 08:56 GMT   |   Update On 2023-04-10 08:56 GMT
  • ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே மதகநேரியில் திருவாடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு உரிய குத்தகை மற்றும் அடவோலை வழங்க வலியுறுத்தி ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் தனபால் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருவாடு துறை ஆதீன இடப் பிரச்சினை சம்பந்தமாக ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் 90 நாட்களுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும்,விரைவில் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், திருவாடுதுறை இட பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட மடாதிபதிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்றும், மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்றும், 20 நாட்களுக்குள் பிரச்சி னைக்கு தீர்வு காணப்படா விட்டால் பாளையங் கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மதகனேரி, செம்பிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News