உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர்கள் அரங்கில் நேற்று நில அளவைத்துறை சார்பில், புதிதாக பணிநியமனம் பெற்ற நில அளவர்களுக்கான பயிற்சியை கலெக்டர் கே.எம்.சரயு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கும் போது சரியான முறையில்அளவீடுசெய்யவேண்டும்

Published On 2023-05-23 15:30 IST   |   Update On 2023-05-23 15:30:00 IST
  • பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் மிகவும் முக்கியமான துறை நில அளவைத் துறையாகும்.
  • அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிலம் முக்கியமானது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர்கள் அரங்கில் நேற்று நில அளவைத்துறை சார்பில், புதிதாக பணிநியமனம் பெற்ற நில அளவர்களுக்கான பயிற்சி நடந்தது.

இதை கலெக்டர் கே.எம்.சரயு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரால் பணி நியமனம் செய்யப்பட்ட, கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நில அளவர்கள், வரைவாளர்கள் உள்ளிட்ட 70 பேருக்கு, இங்கு 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் மிகவும் முக்கியமான துறை நில அளவைத் துறையாகும். அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிலம் முக்கியமானது. அரசு ஆவணங்களில் உள்ள நிலம் நில அளவையர்களால் அடையாளம் காணப்பட்டு அதன் பிறகே தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பணி முக்கியமான பணியாகும். நில உரிமையாளர்களுக்கு தனிபட்டா, கூட்டுப்பட்டா, மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் போது சரியான முறையில் அளவீடு செய்து வழங்கவேண்டும். இப்பயிற்சியில் நில அளவை எப்படி மேற்கொள்வது, நில வரைபடம் தயார் செய்வது, டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவிடு செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

எனவே இப்பணியில் சேர்ந்துள்ள நீங்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நிலஅளவை) சேகரன், தாசில்தார் சம்பத், கோட்ட ஆய்வாளர் கிருஷ்ணம ூர்த்தி, திட்டப் பணிகள் ஆய்வாளர்கள் பெரியசாமி, சதாசிவம், கோவிந்த ராஜ், பாண்டிச ்செல்வி உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News