உள்ளூர் செய்திகள்

4 கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்

Published On 2022-06-23 08:51 GMT   |   Update On 2022-06-23 08:51 GMT
  • பரமத்தி வட்டாரத்தில் கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர், நல்லூர் மற்றும் இருட்டணை ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் 15-35 ஏக்கர் நிலப்பரப்பு வரை 2-வது தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம். மேலும் இத்திட்டத்திற்கு தேவையான தகுதிகள் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் அக்கிராம பஞ்சாயத்துகளிளோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ குடியிருப்போராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News