உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு செயல் விளக்கம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

Published On 2023-01-01 09:13 GMT   |   Update On 2023-01-01 09:13 GMT
  • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.
  • வாசுதேவநல்லூர் அருகே விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன் மற்றும் சுமிதா பாரதி ஆகியோர் அறிவுரையின்படி நேற்று வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News