வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கிய காட்சி.
சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை கள், கேடயம், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, மதி மாரிமுத்து, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, மாரிசாமி, மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், அஜய்மகேஷ்குமார், வீரமணி, பிரகாஷ், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.