உள்ளூர் செய்திகள்
பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
- நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் துரோணாஸ் பேட்மிட்டன் கிளப் சார்பில் இன்னர் கிளப் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டது.
கிளப்பின் உரிமையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
போட்டியை சந்திரசேகர் வழி நடத்தினார்.
இந்த போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை ஜெயராம் அசோகன், மூன்றாம் இடத்தை உதயன் தீபக் சூர்யா, நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சிவப்பிரகாசம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இப்போட்டியில் தஞ்சை பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பேட்மிட்டன் வீரர்கள் பங்கு பெற்றனர்.