உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள்- பரபரப்பு

Published On 2023-08-09 15:41 IST   |   Update On 2023-08-09 15:57:00 IST
  • போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றது.
  • தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

கும்பகோணத்தில் இருந்து 2 தனியார் பஸ்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து வல்லத்திற்கு நகர அரசு பஸ் புறப்பட்டது.

நகரப் பஸ்சை ஓட்டுனர் கனகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் பஸ்சுக்கு வழி கொடுக்காதால், ஆத்திரமடைந்த தனியார் பஸ் கண்டக்டர்கள் அரசு பஸ்சை ஆற்றுப்பாலம் அருகே வழிமறித்து ஓட்டுனர் கனகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாக்குதல் நடத்திய தனியார் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News