உள்ளூர் செய்திகள்

சுவாமி- அம்பாள் வீதிஉலா புறப்பாடு நடந்தது.

தஞ்சை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-07-31 15:40 IST   |   Update On 2023-07-31 15:40:00 IST
  • தஞ்சாவூர் வடக்கு வீதியில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
  • பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், அம்மன், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு வீதியில் ரத்னகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனும் அம்மனுக்கும் தனி தனி நந்தி உள்ளது. இரண்டிற்கும் பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

இந்த நிலையில் பிரதோஷம் தினத்தை முன்னிட்டு சிவனுக்கும் அம்மனுக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின், கோவில் வளாகத்தில் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News